தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்.. எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படும் என்றும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். இதன் மூலம், அந்தந்த மாவட்டங்களில் எந்த மாதிரியான சேவைகள் பாதிக்கப்படும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.


 



நாளை மாலை 6 மணிக்கு மேல் மார்ச் 31ம் தேதி வரை மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 144 தடை உத்தரவும் இந்த காலகட்டத்தில் அமலில் இருக்கும் சமூக ஒன்று கூடலை தவிர்க்க வேண்டும் என்று பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டும் பொதுமக்கள் அதை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் முதல்வர் இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று காலை அடுத்து அடுத்து பொதுமக்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில் தீவிர நடவடிக்கைகளை அரசு நேரடியாக கையில் எடுத்துள்ளது மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தனியார் வாகனங்கள் செல்ல முடியாது பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள் ஆட்டோ டாக்ஸி போன்றவை இயங்காது அத்தியாவசிய பொருட்களான, பால், காய்கறிகள், மளிகை கடை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும் இயங்காது எனவே சொந்த ஊருக்கு போகிறவர்கள், நாளை மாலைக்குள் அந்தந்த ஊர்களை சேரும்படி பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வது நல்லது. அதன் பிறகு அவர்கள், எங்கே இருக்கிறார்களோ அங்கே தான் இருக்க முடியும்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/explainer-what-are-the-things-you-won-t-get-while-districts-are-sealed-in-tamilnadu-380610.html